எட்டு

2:48 பிப இல் ஜூன் 21, 2007 | டைரி குறிப்பு இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்

எட்டெழுத கடுமையாக முயற்சித்த பின் கிடைத்தவை இவை

1) முப்பத்திரெண்டு வருடங்களுக்கு பின்னும் எழுதும் படியான எட்டு தகவல்களை யோசித்தால் தலை சுற்றுகின்றது.

2) அடுத்த எட்டு பேராக யாரை அழைப்பது என்று யோசித்தால் சுற்றிய தலை தனியே கழண்டு பறந்து விடும் அளவுக்கு போய் விடுகின்றது.

3)

4)

5)

6)

7)

8)

இரண்டிற்கு மேல் எழுதியிருப்பது எல்லாம் சாதாரணமாய் பார்க்கும் மக்கள் கண்களுக்கு தெரியாது. அது ஒரு சிறப்பு எழுத்துரு கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேல் உங்கள் மானிடரில் இந்த பதிவை தொடர்ந்து உற்று பார்க்கும் பட்சத்தில் அவை கண்களுக்கு புலப்படும்.

அழைப்பு விடுத்த பாலாவிற்கும், விக்கிக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.

அடுத்த எட்டு பேர்

1) சிவாஜி ராவ் என்ற ரசினிகாந்த்
2) ஷ்ரேயா
3) கருணாநிதி
4) ஜெயலலிதா
5) லியர்னாடோ டாவின்சி
6) ரூஸோ
7) கடவுள்
8) இந்திய குடிமகன்

வார கடைசி(மெமோரியல் டே)

4:07 பிப இல் மே 31, 2007 | டைரி குறிப்பு இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக

இந்த வாரம் பார்த்த படங்கள்

Crank- போர்.
Deja-Vu – நல்ல படம்
Music and Lyrics- சுமார்
Casino Royale – நல்ல ஆரம்பம், அப்புறம் போர், இறுதிக்காட்சி ஏமாற்றம்
பின்கோடு வைத்த கிரிக்கெட் படம்(தமிழ்)- நன்றாக இருந்தது. காதல் பாடல்கள்தான் சம்பந்தமே இல்லாமல்.

தோழியும், மகளும் இல்லாமல் வாரக் கடைசி சரியில்லை. பழைய பிரம்மச்சாரி வாழ்க்கை ரசிக்க முடியவில்லை. வயதாகி விட்டதோ?

வாசலில் வைத்த ரோசா பூத்திருந்தது. good.

அலசல்

7:56 பிப இல் மே 23, 2007 | டைரி குறிப்பு இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்

ஒவ்வொரு நாளும் எதுவும் நடக்கும் என்பது அவசியமில்லை. ஒன்றும் நடக்காமலே நாள் முடியலாம். இன்று அப்படிதான் போகுமென பட்சி சொல்கின்றது.

தோழனுக்கு பிறந்த நாள். மறந்து போயாகி விட்டது. பின் கோடு வைத்த கிரிக்கெட் படம் டிவிடியில் வந்திருக்கின்றது. இந்த வாரம் பார்க்க வேண்டியதுதான்.

அதிர்வுகள் தகவல்களாக போய் விடுகின்றது. ராஜிவ் இறந்த போது இருந்த அதிர்வுகள் இந்த மே மாதம் 21ம் தேதி நகர்ந்த போது நியாபகம் கூட இல்லை.

கருணாநிதி கலைஞர் சானல் ஆரம்பிப்பார் போல உள்ளது. ஒரே நேரத்தில் அதிக பரப்பான மக்களை சந்திக்க ஊடகம் தேவை. it is really powerfull.

பங்களாதேஷோடு சதம் அடித்த உடனே என் பதினேழு வருட கிரிக்கெட்டுக்கு பின் யாரிடமும் எதையும் நிறுபிக்க வேண்டியதில்லை என டெண்டுல்கர் மொழிந்துள்ளார். அண்ணாச்சிக்கு எதையும் நிறுவ வேண்டிய அவசியமில்லையெனில் மூட்டையை கட்டிக் கொண்டு போக வேண்டியதுதானே. என்ன கருமத்துக்கு இன்னமும் மட்டையை கட்டி களத்தில் இறங்கி கொண்டிருக்கின்றார்.

அழகிய தமிழ்மகன் உலகம் சுற்றும் வாலிபனின் கதை என படித்தேன். அட பாவிகளா விஞ்ஞானி முருகனை உலகத்துக்கு கொடுத்த நல்ல படத்தை நாசம் செய்து விடாதீர்கள். போக்கிரி பார்த்த பின் விஜயை கண்டால் பூச்சாண்டியை பார்த்தது போல் இருக்கின்றது.

இன்று

4:24 பிப இல் மே 22, 2007 | டைரி குறிப்பு இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு நல்ல உரையாடல் என்பது இரு புறமும் இலக்கு வைத்து நகரும் போது நேருவதில்லை. அது போல் இருக்கையில் வர்த்தக பேச்சுவார்த்தையாகதான் அமைகின்றது. உரையாடல் தொடங்கும் புள்ளி, முடியும் புள்ளி என அமையாமல் பரவலாக அமையும். புலி ஒன்றை இழுத்து பிடித்து பயத்துடன் இருப்பது போல் இருந்தது, உரையாடலின் பின் பிடிமானம் இன்றி பளு குறைந்த உணர்வு உண்டாகின்றது.

கண்களில் குறும்புடன் மகள் சில நேரம் மூக்கை காட்ட சொன்னால் தலையை காட்டுவதும், தலையை காட்ட சொன்னால் மூக்கை காட்டுவதுமாய் இருக்கின்றாள். சில நேரம் சரியாக சொல்லவும் செய்கிறாள். பத்து மாதம் முடிந்து விட்டது. time flies.

good day man.

காரில் கேட்டு மனதில் நின்ற பாடல் : நினைத்து நினைத்து பார்த்தேன் (7g ரெயின்போ காலனி). இனிமையான பாடல். ju

மனதில் பட்டது

4:39 பிப இல் மே 21, 2007 | டைரி குறிப்பு இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக

எல்லோரையும் சந்தோஷமாக வைத்திருப்பது முக்கியந்தான். ஆனால் அது எப்போதும் கை கூடுவதில்லை. அதன் பக்க விளைவு ரசிக்கும் படியும் இருப்பதில்லை. குறைந்த பட்ச எதிர்பார்ப்போடு நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பார்த்து ரசிக்கலாம் என்னும் சிந்தாந்ததில் எனக்கு நிறைய நேரம் நம்பிக்கை ஊஞ்சலாட்டம் நடக்கின்றது.

பிரச்சனைகள் தீர்வதில்லை, ஒத்தி வைக்கப்படுகின்றன. ஒத்தி வைக்கப்பட்ட நேரத்தில் கொஞ்சம் கொறித்து கொள்ள சந்தோஷமும் அவை சார்ந்தவைகளும். சுய எதிர்பார்ப்பில் ஏதேனும் பங்கம் வருகையில் கொறிப்பதை தூக்கி எறிந்து பிரச்சனையை மீண்டும் பொதுவில் வைத்து கம்பெடுத்து சுலற்ற வேண்டியதுதான், அடுத்து கொறிக்க ஆசை வருகையில் கம்பை தூக்கி போடலாம், இல்லாவிட்டால் கை வலித்தால் கம்பை தூக்கி போடலாம்.

life sucks

தகவல்

5:46 பிப இல் மே 9, 2007 | டைரி குறிப்பு இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக

மிக்ஸில போட்டு மாவு அரைக்கரது போல தலைக்குள்ள அழகிரி/மாறன் யுத்தம், நமீதா விஜய்காக்க குறைத்து கொண்ட பன்னிரென்டு கிலோ, இரண்டு வயதுக்கு முன்னால டிவி குழந்தைகளுக்கு காட்ட கூடாதுனு சொன்ன ரேடியோ செய்தி எல்லாத்தையையும் போட்டு ஒரு அரவை கொடுத்தா வீட்டுலேருந்து ஆபிஸ் வந்திடுது. வழக்கமான சிரிப்பு, மற்றும் சில்லரை வேலைகள் எல்லாம் ஒட்டி விட்டு கொஞ்சம் பாஸ்கட்பால் செய்திகள் கொறிப்பு. நிறைய தகவல்கள் குவிஞ்சு கிடக்கு. படிக்க படிக்க இன்பம்.

தகவல் எவ்வளவு முக்கியம். எவ்வளவு விரைவா பறிமாற்றி கொள்ள படுதுனு பார்த்தா ஆச்சரியமாதான் இருக்கு. சைக்கிள் கேப்பில தகவல் ஒரு புள்ளியில இருந்து பத்து புள்ளிகளுக்கு பரவுது. பத்து பதினைந்து வருஷத்துக்கு முன்னால இதெல்லாம் சாத்தியபடுமுனு கூட நினைச்சு பார்த்ததில்ல. அப்பவும் எதிர்காலத்தை பத்தி சிந்திக்க சொன்னா வித்தியாசமான உடைகள்ல மாத்திரை தின்னுகிட்டு ராக்கெட்டில பறக்கறததான் யோசிக்க முடிஞ்சது. தகவலோட முக்கியத்தையோ அதை பறிமாறிக் கொள்வதில் சுலபம் கிட்டுவதால் உண்டாகும் வசதிகளை பற்றியோ யோசிச்சதில்லை.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.