எட்டு

2:48 பிப இல் ஜூன் 21, 2007 | டைரி குறிப்பு இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்

எட்டெழுத கடுமையாக முயற்சித்த பின் கிடைத்தவை இவை

1) முப்பத்திரெண்டு வருடங்களுக்கு பின்னும் எழுதும் படியான எட்டு தகவல்களை யோசித்தால் தலை சுற்றுகின்றது.

2) அடுத்த எட்டு பேராக யாரை அழைப்பது என்று யோசித்தால் சுற்றிய தலை தனியே கழண்டு பறந்து விடும் அளவுக்கு போய் விடுகின்றது.

3)

4)

5)

6)

7)

8)

இரண்டிற்கு மேல் எழுதியிருப்பது எல்லாம் சாதாரணமாய் பார்க்கும் மக்கள் கண்களுக்கு தெரியாது. அது ஒரு சிறப்பு எழுத்துரு கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேல் உங்கள் மானிடரில் இந்த பதிவை தொடர்ந்து உற்று பார்க்கும் பட்சத்தில் அவை கண்களுக்கு புலப்படும்.

அழைப்பு விடுத்த பாலாவிற்கும், விக்கிக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.

அடுத்த எட்டு பேர்

1) சிவாஜி ராவ் என்ற ரசினிகாந்த்
2) ஷ்ரேயா
3) கருணாநிதி
4) ஜெயலலிதா
5) லியர்னாடோ டாவின்சி
6) ரூஸோ
7) கடவுள்
8) இந்திய குடிமகன்

முக்கிய குறிப்பு

1:42 பிப இல் ஜூன் 19, 2007 | Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 பின்னூட்டம்

கருத்தெல்லாம் எதிர்பார்த்து திரைப்படங்கள் போவதில்லை. திரைப்படங்கள் பொழுதுபோக்கிற்கே என்ற நம்பிக்கை உண்டு. நண்பர்கள் சகிதமாய் நேற்று திரையரங்கு சென்று சிவாஜி பார்த்து விட்டேன்.

ரஜினி இளமையாய் இருக்கின்றார்( பவுடர் செலவு பட்டையை கிளப்பி இருக்கும்).
ஜென்டில்மேன் பட கதையை அங்கும் இங்கும் ராவி புதுசாய் சொல்லியிருக்கின்றார்கள்.
பாட்ஷா பார்த்த போது இருந்த உணர்வு இந்த படம் பார்த்து வரவில்லை.
லேசாய் தலைவலி வந்தது.
சஹாணா பாடல் படமாக்கிய இடம் நன்றாக இருந்தது.
அரங்கு நிறைந்திருந்தது.

இன்றைய நிலை

2:59 முப இல் ஜூன் 8, 2007 | கவிதை, சுற்றி நடப்பவை இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக

பிணம் இருக்கின்றது
இவனுக்கு அழதான் ஆசை
உற்றோரோ உறவினரோ
பெரியோரோ சிறு பிள்ளையோ
சிதைந்து விழுந்து
வலித்து செத்தவர் காண
அழதான் ஆசை
ஆனால் பிணத்தின் குறி
தெரியால் மொழி தெரியாமல்
சாதி தெரியாமல் கட்சி தெரியாமல்
கண்ணீர் விட்டு ஆவதென்ன
லாபமோ நஷடமோ
கணக்கு பார்க்காமல்
கண்ணீர் விடுவதில்லை
லாபத்தில் எள்ளல் வரலாம்
லாபத்தில் சிரிப்பு வரலாம்
செத்தவன் முகத்தில் சாணியும் வீசலாம்
அது வரை இரக்கப்படு
இளிவாச்சயன் ஆவதில்லை இவன்
ஏனேனில் இவன்தான் இன்றைய
சமூகநீதி மற்றும் சமத்துவத்தின் ஏகபிரதிநிதியாம்
வாழ்க சமூகநீதி!

***********************
பிணங்களும், வன்முறைகளும் அதை சார்ந்த பிரச்சாரங்களும் தரும் வெறுப்பில் எழுதியது.
****************************
மதுரையில் மூன்று பிணங்கள்
தரும்புரியில் மூன்று பிணங்கள்
விழுப்புரத்தில் கொளுத்தப்பட்டு காயமடைந்த காவலர்.

அவனும் நானும்

5:26 முப இல் ஜூன் 3, 2007 | கவிதை இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக

அடிக்கடி பார்க்கின்றேன்
எப்போதும் தெரிகின்றான்
வெறித்த பார்வை உண்டு
அந்நிய வாசனை அதிகமுண்டு
நேற்று இவன் போல் இருந்திருப்பேனோ
நாளை இவன் போல இருப்பேனோ
என்றாவது என்னை போல
இவன் இருக்க விழைவானோ
படபடப்பும் அதில் நுழையும்
பயங்களும் படர ஆரம்பிக்கும் வேளையில்
இடமும் வலமும் மாறி தெரியும் ஆடி
நகரந்து செல்ல வேண்டியதாகின்றது
மீதி உரையாடல் நாளைக்கு

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.