புராணங்கள்

செப்டம்பர் 24, 2007 at 7:11 பிற்பகல் | In கவிதை | Leave a Comment

புராணமெனும் அடிமைச்சங்கிலி
பூட்டபடுகையில் அது புனிதமெனும்
பட்டால் அலங்கரிக்கபடுகின்றது
சங்கிலியின் சலசலப்பே
சாத்திரமென மொழியப்படுகின்றது
புகை வரும் எதுவும் ஊதுபத்தியென
புகட்டபட்ட நிலையில்
கொள்ளிக்கட்டையில் சதை எரிந்தாலும்
கற்பூரமென கண்ணில் ஒத்திக் கொள்வதுதான்

கேபிட்டலிஸ்ட்

ஜூலை 16, 2007 at 3:34 பிற்பகல் | In கவிதை | Leave a Comment

பத்து பழமொழியும்
பாக்கெட்டில் பத்திரமாய் உண்டு
கேட்பவன் அசரும் வரை
கொடுக்க அசதியில்லை
உயரிய சமூகம்
உழைப்பவன் சமூகம் என
வாய்தோரணம் அவிழ்க்கவும் முடியும்
இனமான கோஷங்கள் எழுப்பி
இருப்பவன் கண் கட்டவும் தெரியும்
பிள்ளைக்கு ஊரான் சொத்து
பெரிய அக்காவுக்கு வீடு
சின்ன தங்கைக்கு பெண்ஸ் கார்
மைத்துனனின் ஒன்றுவிட்ட
அத்தைக்கு பதவி
எல்லாம் கொடுத்தாலும்
இன்னமும் நான்
இனமான பொதுவுடமை சிங்கந்தான்
ஏனெனில்

இன்றைய நிலை

ஜூன் 8, 2007 at 2:59 மு.பகல் | In கவிதை, சுற்றி நடப்பவை | Leave a Comment

பிணம் இருக்கின்றது
இவனுக்கு அழதான் ஆசை
உற்றோரோ உறவினரோ
பெரியோரோ சிறு பிள்ளையோ
சிதைந்து விழுந்து
வலித்து செத்தவர் காண
அழதான் ஆசை
ஆனால் பிணத்தின் குறி
தெரியால் மொழி தெரியாமல்
சாதி தெரியாமல் கட்சி தெரியாமல்
கண்ணீர் விட்டு ஆவதென்ன
லாபமோ நஷடமோ
கணக்கு பார்க்காமல்
கண்ணீர் விடுவதில்லை
லாபத்தில் எள்ளல் வரலாம்
லாபத்தில் சிரிப்பு வரலாம்
செத்தவன் முகத்தில் சாணியும் வீசலாம்
அது வரை இரக்கப்படு
இளிவாச்சயன் ஆவதில்லை இவன்
ஏனேனில் இவன்தான் இன்றைய
சமூகநீதி மற்றும் சமத்துவத்தின் ஏகபிரதிநிதியாம்
வாழ்க சமூகநீதி!

***********************
பிணங்களும், வன்முறைகளும் அதை சார்ந்த பிரச்சாரங்களும் தரும் வெறுப்பில் எழுதியது.
****************************
மதுரையில் மூன்று பிணங்கள்
தரும்புரியில் மூன்று பிணங்கள்
விழுப்புரத்தில் கொளுத்தப்பட்டு காயமடைந்த காவலர்.

அவனும் நானும்

ஜூன் 3, 2007 at 5:26 மு.பகல் | In கவிதை | Leave a Comment

அடிக்கடி பார்க்கின்றேன்
எப்போதும் தெரிகின்றான்
வெறித்த பார்வை உண்டு
அந்நிய வாசனை அதிகமுண்டு
நேற்று இவன் போல் இருந்திருப்பேனோ
நாளை இவன் போல இருப்பேனோ
என்றாவது என்னை போல
இவன் இருக்க விழைவானோ
படபடப்பும் அதில் நுழையும்
பயங்களும் படர ஆரம்பிக்கும் வேளையில்
இடமும் வலமும் மாறி தெரியும் ஆடி
நகரந்து செல்ல வேண்டியதாகின்றது
மீதி உரையாடல் நாளைக்கு

கொள்கை பிடிப்பு

மே 17, 2007 at 6:00 பிற்பகல் | In கவிதை | Leave a Comment

பிடிப்பாய் இருப்பதாய்
சத்தியம் செய்தே பிடி கொடுக்கப்பட்டது
இறுக்கமாய் இருத்தல் நடைமுறையல்லவென
இறுக்கம் சற்று தளர்த்ததப்பட்டது
உறவெனும் கோணங்களின் உரசலில் கொஞ்சம்
உடைந்து போனது பிடி
பொருளின் தேவை கூட பிடியின்
பிடிப்பு இன்னும் தளர்ந்தது
வேட்டியின் நுனி ஒட்டும் உலர் மண்ணாய்
வேடம் பூண்ட பிடிப்பு உண்டு
உதறி போனால் ஒடி போகும் நிலை கொண்டு
மூளையின் மடிப்பில் மறைந்து போனது
நாக்கின் நகர்தலில் அமர்ந்து கொண்டது
இன்னமும் சொல்லிக் கொள்ளதான் ஆசை
கொள்கை வீரன் நாங்களென

நிரந்தரம்

மே 17, 2007 at 5:51 பிற்பகல் | In கவிதை | Leave a Comment

நிரந்தரம் தேவைபடுகின்றது
உளவியல் ரீதியில் உள்ளுக்குள்
பரவும் பாதரசமாய் வழுக்குதல்
சுகித்தாலும் நிரந்தரமே நிச்சயமாகின்றது
உறவிலே பொருளிலே நிரந்தரமாய்
நிரந்தரத்தின் தேவை உண்டு
எழுதப்படாத வாக்குறுதிகளின்
எதிர்பார்ப்பு என்றும் உண்டு

மன்னனின் மகன்

மே 15, 2007 at 4:12 பிற்பகல் | In கவிதை | Leave a Comment

மக்களாட்சி போர்வையில்
மன்னனுக்கு மகனாய் இருத்தல் சுகமே
வெறியாயாட்டம் வீரமாகவும் காட்டப்படலாம்
புறநானுறாய் பேசும் புலவர் கொம்பும் சீவலாம்
அதிகாரத்தின் நுனி கொம்பில் வேதாளமாய்
ஆட்டமிடுகையில் வாக்களித்தவன் கிறுக்கனே

வெறியாட்டம் முடித்து இளைப்பாற
மக்கள் கூடத்தின் மத்தியில்
ஒப்பாரி ஒலி கொண்ட இழவு வீட்டின் முதுகேறி
ஒய்யாரமாய் பொன்விழா எடுத்து முதுகும் சொறியலாம்
மாறு வேடமின்றி மன கூச்சமின்றி
மன்னவன் மகனும் பார்வைகூடத்தில்
இருக்கை அமைத்து பார்த்தும் ரசிக்கலாம்
வாழ்க மக்களாட்சி வாழ்க பகுத்தறிவு

சாமான்யனாய் இருத்தலும்
சாக்கடையாய் இருத்தலும் ஒன்றே
வீச்சம் கூடும் போதே நாசிக்கு தெரியும்
கொஞ்சம் மருந்தடித்தால் மறந்து போகும்
செத்தவன் குடும்பத்துக்கு சில்லறை மருந்து

பொன்விழா பெருமையிலும்
கொண்டாட குதூகலத்திலும்
குடும்ப சண்டை இரைச்சலிலும்
எலும்புத்துண்டினை கண்ட மிருகத்தின்
எழுச்சியில் மந்தை இயங்க
காலில் மிதிப்பட்ட சாணி துடைக்கும்
இலாவகத்தில் இறந்தவன் செய்தி
துடைக்கப்படுகின்றது
கரைகளை கண்டு கவலைபடாதீர்கள்
அவை மக்களாட்சி மகாட்சவத்தின் ரேகைகள்

பகுத்தறிவுள்ள பகலவன்
எம்மன்னவன் சொல்வது இதுவே
வாழ்வது மன்னனாய் இருக்கும்
வரை வீழ்பவன் உதிரும் ரோமமே

உலவாயி

மே 7, 2007 at 3:33 பிற்பகல் | In கவிதை | Leave a Comment

உலவாயி அழைக்கின்றாள்
ஆவேசமாய் சில நேரமும்
பாசமாய் சில நேரமும்
பசியோடு சில நேரமும்
மாடமாளிகை கூரை கோபுரமுள்ள
வெறும் கல்லான சாமியல்ல அவள்
எங்கள் மக்களின்
கனவு வழி சஞ்சாரியவள்
பூசாரியின் உடுக்கொலியில் அவள்
பேச்சிருக்கும்
எங்கள் வீட்டு உலவாயி
என்றைக்கும் உண்டு எங்களோடு.

உலவாயி கோயிலுக்கு அப்பாதான் தற்போதைய பூசாரி. முன்பு தாத்தா பூசாரியாக இருந்தார். நேற்று அண்ணணோடு பேசும் போது தன் மகளை அவர் உலவாயி என கொஞ்சுவதை பார்த்தேன். பல தலைமுறையாக மக்களின் நம்பிக்கையின் வழி உலவாயி வாழ்ந்து வருகின்றாள். உலவாயி கோயிலுக்கு ஏழெட்டு வருடங்களுக்கு முன் சென்றிருக்கின்றேன். அந்த கோவில் ஒரு ஒடு வாய்ந்த வீடு. வரிசையாக இருக்கும் வீடுகளுக்குள் அதுவும் ஒரு வீடாகதான் இருக்கின்றது. அந்த வீட்டினுள் தீட்டிய ஒவியமாய் உலவாயி உண்டு. சிலை கிடையாது. எங்கள் குலதெய்வம் கல்லுபிலிக்குமே உருவம் கிடையாது. கல்லுபிலிக்கு கூரையையும் கிடையாது. பெரும் பாறை ஒன்றில் எண்ணைய் பூசப்பட்டு அதுவே தெய்வமாய் வழிப்பட படுகின்றது. என் தங்கையின் குலதெய்வ கோயிலுக்கும் சென்றிருக்கின்றேன், அதற்குமே உருவ சிலை கிடையாது. சுவற்றோவியமே உண்டு.

உலவாயி வலிமை வாய்ந்த தெய்வமாக கருதப்படுகின்றாள். உலவாயி தன் தேவைகளை தானே மக்கள் கனவில் வந்து சொல்லி சரி செய்து கொள்கின்றாள். மக்களின் பிரச்சனைக்கும் ஆலோசனை வழங்குகின்றாள். கடவுள் நம்பிக்கை அப்பால் வைத்து விட்டு இருக்கும் எனக்கும், அப்பாவுக்கும் இந்த கனவு வழி உரையாடல் குறித்த பேச்சு வரும். அப்பாவிடம் நம்பிக்கை சார்ந்த பேச்சுகளும், செய்திகளும் நிறைய உண்டு. ஊராரின் நம்பிக்கையில்தான் உலவாயி வாழ்கின்றாள் எனதான் எனக்கு தோன்றுகின்றது.

வலியும் பயமும்

மே 3, 2007 at 5:47 பிற்பகல் | In கவிதை | Leave a Comment

பயம் இருக்கின்றது
வடிவம் இல்லாமல்
ஆனால் ஆள் முழுதும் இருக்கின்றது
ஆடை போல் போர்த்தபடவில்லை
சதை போல் உள் கட்டப்பட்டிருகிறது

துடிக்கும் இதய தசையின் வலியாய்
வெளிச்சம் வர பயம் தெரிந்தது
சில நொடியில் ஆரம்பித்து
சில மணி நேர தரிசனம்
பிள்ளையின் சிரிப்பும்
தோழியின் தவிப்பும்
பாரமாய் தெரிவதும் அந்நொடி சாத்தியமே
எதுவும் நடக்கலாம் என்ற நிதர்சனம் விளங்க
பயத்தின் துடிப்பும் கூடுகின்றது

வலி போனபின்னும் பயத்தின் நிழல் உண்டு
வந்தவை போனவை பற்றிய கணக்குகளின்
புதிய சமன்பாடுகளில் ஒட்டிக் கொண்டு
பயம் வந்த இந்த மணிகளின் நியாபகம்
அமுதசுரபியின் அன்னம் போல் தொடர்ச்சியாய்
என்னோடு உண்டு

மகள்

ஏப்ரல் 27, 2007 at 3:19 பிற்பகல் | In கவிதை | Leave a Comment

உடைந்து போன ப்ளாஸ்டிக் துண்டிலும்
சிதறி போன உணவு பொருள்களிலும்
பழசாய் போன அட்டை பெட்டிகளிலும்
ரசிக்க வைக்கும் ரசனைகள் ஒளிந்திருப்பதுண்டு
உணவை கசக்கி சட்டையில் பூசி
கண் பார்த்து சிரிக்கும் கவிதைதான்
ரசனை எனக்கு கற்று தருகின்றது

அடுத்த பக்கம் »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.