கேபிட்டலிஸ்ட்
ஜூலை 16, 2007 at 3:34 பிற்பகல் | In கவிதை | Leave a Commentபத்து பழமொழியும்
பாக்கெட்டில் பத்திரமாய் உண்டு
கேட்பவன் அசரும் வரை
கொடுக்க அசதியில்லை
உயரிய சமூகம்
உழைப்பவன் சமூகம் என
வாய்தோரணம் அவிழ்க்கவும் முடியும்
இனமான கோஷங்கள் எழுப்பி
இருப்பவன் கண் கட்டவும் தெரியும்
பிள்ளைக்கு ஊரான் சொத்து
பெரிய அக்காவுக்கு வீடு
சின்ன தங்கைக்கு பெண்ஸ் கார்
மைத்துனனின் ஒன்றுவிட்ட
அத்தைக்கு பதவி
எல்லாம் கொடுத்தாலும்
இன்னமும் நான்
இனமான பொதுவுடமை சிங்கந்தான்
ஏனெனில்
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.