அலசல்

மே 23, 2007 at 7:56 பிற்பகல் | In டைரி குறிப்பு | 3 Comments

ஒவ்வொரு நாளும் எதுவும் நடக்கும் என்பது அவசியமில்லை. ஒன்றும் நடக்காமலே நாள் முடியலாம். இன்று அப்படிதான் போகுமென பட்சி சொல்கின்றது.

தோழனுக்கு பிறந்த நாள். மறந்து போயாகி விட்டது. பின் கோடு வைத்த கிரிக்கெட் படம் டிவிடியில் வந்திருக்கின்றது. இந்த வாரம் பார்க்க வேண்டியதுதான்.

அதிர்வுகள் தகவல்களாக போய் விடுகின்றது. ராஜிவ் இறந்த போது இருந்த அதிர்வுகள் இந்த மே மாதம் 21ம் தேதி நகர்ந்த போது நியாபகம் கூட இல்லை.

கருணாநிதி கலைஞர் சானல் ஆரம்பிப்பார் போல உள்ளது. ஒரே நேரத்தில் அதிக பரப்பான மக்களை சந்திக்க ஊடகம் தேவை. it is really powerfull.

பங்களாதேஷோடு சதம் அடித்த உடனே என் பதினேழு வருட கிரிக்கெட்டுக்கு பின் யாரிடமும் எதையும் நிறுபிக்க வேண்டியதில்லை என டெண்டுல்கர் மொழிந்துள்ளார். அண்ணாச்சிக்கு எதையும் நிறுவ வேண்டிய அவசியமில்லையெனில் மூட்டையை கட்டிக் கொண்டு போக வேண்டியதுதானே. என்ன கருமத்துக்கு இன்னமும் மட்டையை கட்டி களத்தில் இறங்கி கொண்டிருக்கின்றார்.

அழகிய தமிழ்மகன் உலகம் சுற்றும் வாலிபனின் கதை என படித்தேன். அட பாவிகளா விஞ்ஞானி முருகனை உலகத்துக்கு கொடுத்த நல்ல படத்தை நாசம் செய்து விடாதீர்கள். போக்கிரி பார்த்த பின் விஜயை கண்டால் பூச்சாண்டியை பார்த்தது போல் இருக்கின்றது.

3 மறுமொழிகள் »

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

  1. —போக்கிரி பார்த்த பின் விஜயை கண்டால் பூச்சாண்டியை பார்த்தது போல் இருக்கின்றது.—

    என்னங்க இப்படி சொல்லிட்டீங்க :)

  2. //போக்கிரி பார்த்த பின் விஜயை கண்டால் பூச்சாண்டியை பார்த்தது போல் இருக்கின்றது.//

    அதுக்கப்புறமாத்தானா? :ம்கூம்: ஒண்ணுஞ்சரியில்ல. ;)

    -மதி

  3. மதி,

    அதுக்கு முந்திய படங்களெல்லாம் ஓட்டி ஓட்டி பார்க்க முடிஞ்சது. இந்த படம் எத்தனை தடவை பார்வர்ட் பண்ணினாலும் பயமாதான் இருந்தது.;-)


மறுமொழியவும்

XHTML: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.