மகள்

ஏப்ரல் 27, 2007 at 3:19 பிற்பகல் | In கவிதை | Leave a Comment

உடைந்து போன ப்ளாஸ்டிக் துண்டிலும்
சிதறி போன உணவு பொருள்களிலும்
பழசாய் போன அட்டை பெட்டிகளிலும்
ரசிக்க வைக்கும் ரசனைகள் ஒளிந்திருப்பதுண்டு
உணவை கசக்கி சட்டையில் பூசி
கண் பார்த்து சிரிக்கும் கவிதைதான்
ரசனை எனக்கு கற்று தருகின்றது

மக்கள் நலம்

ஏப்ரல் 27, 2007 at 3:04 பிற்பகல் | In கவிதை | Leave a Comment

எல்லா நேரங்களிலும்
முன் வைக்கப்படும் வாதமாய் மக்கள் நலம்
இசங்களின் இடுக்குகளின் கசடுகள் கூட
இங்கு மக்கள் நலமாய் மாறுவேடம் பூணுகின்றன
மக்களுக்கும் மக்களை பற்றி கவலையில்லை
திருட்டு விசிடி படத்திற்கும் தெருமுனை சிறுநீருக்கும்
நடுவே கொஞ்சம் குறைகள் உண்டு
ஆனால் கவர்ச்சியாய் ஏதேனும் தொட்டுக் கொள்ள
அடுத்து இருப்பினும்
துடைத்து விட்டு கவலை மறந்தொரு வாழ்க்கை
கைகூடுதலும் உண்டு
வெறுப்புணர்வின் உச்சம் புரட்சியாய் போதிக்கப்படுதலுமுண்டு
புரட்டுதன அட்க்குமுறையையும் சமூக தேவையாய் சொல்லபடுதலுமுண்டு
எல்லாரும் முன் சொல்வது மக்கள் நலமே

சொல்லுதல்

ஏப்ரல் 25, 2007 at 4:05 பிற்பகல் | In கவிதை | Leave a Comment

எது நிச்சயம் எது நிரந்தரம்
என்ன வேடம் இன்றைக்கு
எதுவும் எனதாவது இல்லை
நகரும் ரயிலின் ஒசை போல்
இடைவிடாத லயத்தில் இயக்கம்
ஐம்புலன் அறிவே எனது பார்வை
நிகழ்வுகள் ஐம்புலன் கடந்தவையானால்
நிகழ்வின் விளிம்பினை கொண்டே
நிகழ்வு அளக்கப்படுதல் நிச்சயம்
ஆனாலும் எதாவது ஒரு புள்ளியில்
நின்று எனக்கானதை சொல்லுவேன்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.